வடமாகாண வூசூ போட்டியில் 7 தங்க பதக்கங்களை பெற்ற முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீல் நடைபெற்ற வடமாகாண வூசூ போட்டியில் 8 தங்க பதக்களில் 7 தங்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்,பெண் அணியினர் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.
2024ம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இடையேயான வூசூ போட்டி முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் தேசிய வூசூ பயிற்சியாளர்களின் இரு நாள் பயிற்சியுடன் நடைபெற்றது.
வீர வீராங்கனைகள்
இப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் தங்கம் - 5, வெள்ளி - 4, வெண்கலம் - 4, வவுனியா தங்கம் -1, வெண்கலம் - 1, யாழ்ப்பாணம் வெள்ளி - 1, மன்னார் வெண்கலம் -1, பெண்கள் முல்லைத்தீவு மாவட்டம் தங்கம் - 2, வெள்ளி - 2, வெண்கலம் - 2 பெற்று முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சார்பாக உடையார்கட்டு, வள்ளிபுனம், கைவேலி, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, செல்வபுரம் உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு, சிலாவத்தை, , தண்ணீரூற்று, முள்ளியவளை, வற்றாப்பளை, ஒட்டுசுட்டான், தண்டுவான், பாண்டியன்குளம் ஆகிய பிரதேசங்களில் இருந்து வீர வீராங்கனைகள் ஒன்றிணைந்து பங்கு கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வெற்றிக்கு பங்காற்றினர்.
இந்நிகழ்வின் இலங்கை வூசூ சங்க தலைவர், வடமாகாண விளையாட்டு திணைக்கள
தலைமைப்பீட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
