பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பாகவுள்ள வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இரட்டிப்பாக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும்.
மதிய உணவை வழங்கல்
அமைச்சகம் தற்போது 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி வருகிறது.
இந்த திட்டம், அமெரிக்க எய்ட் நிறுவனம், உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் குறித்த மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும்.”என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
