2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அச்சுத் துறைசார்ந்த விருதுகள் மற்றும் வர்த்தக கண்காட்சி
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அச்சுத் துறைசார்ந்த விருதுகள் மற்றும் வர்த்தக கண்காட்சி அக்டோபர் 26 முதல் 28 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 09:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை அதிநவீன தொழில்நுட்பங்களின் பிரம்மாண்டமான நிகழ்வாக இது இடம்பெறவுள்ளது.
இலங்கை அச்சுத் துறை மற்றும் வர்த்தக கண்காட்சி 2023, இலங்கை பொதியிடல் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வருவதுடன், இலங்கை அச்சுப்பொறியாளர் சங்கம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இதனை ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு கண்காட்சிகள்
அச்சுத் துறை மற்றும் பொதியிடல் (பேக்கேஜிங்) தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளின் சிறப்பு கண்காட்சிகள் இடம்பெறும்.
அச்சுத் துறையில் உள்ள ஆர்வலர்களுக்கு இந்த கண்காட்சி ஒரு முக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை ஏனெனில் இந்த வர்த்தக கண்காட்சியில் 44 உள்ளூர் தொழில் வல்லுனர்கள் மற்றும் 06 சர்வதேச வல்லுனர்களும் பங்கேற்கின்றனர்.
இதேவேளை, தேசிய அச்சுத்துதுறை விருதுகள் 2023, இம் மாதம் 27ஆம் திகதி மாலை கொழும்பு - 03 இல் அமைந்துள்ள மரினோ பிச் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதன் போது அச்சிடும் துறையில் சிறந்த சாதனைகள் கௌரவிக்கப்பட உள்ளதுடன், தொழில்துறையில் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப வல்லமையின் உச்சத்தை உள்ளடக்கிய, ஒளிர்வுகளின் விவேகமான சங்கமத்திற்கான ஒரு மரியாதைக்குரிய தளமாகவும் விருது மேடை அமைய உள்ளது.
1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை அச்சகத்தார் சங்கம், இலங்கையில் அச்சுத் துறையின் நலன்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது.
பல தசாப்தங்களாக, இந்த சங்கம் உறுதியுடன் முன்னேறி, அதன் உறுப்பினர்களுக்கு விலைமதிப்பற்ற ஆதரவையும் வளங்களையும் வழங்குகிறது.
அச்சுத் தொழில் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பதற்கு இலங்கை அச்சகத்தார் சங்கம் அரசாங்கத்துடன் இணைந்து பல
முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆக்கபூர்வமான உரையாடல்கள் மற்றும் பிரசாரங்கள் மூலம் தொழில்துறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் தீர்வுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது.
செயற்குழு
Sri Lanka Print 2023 Exhibition மற்றும் Trade Fair 2023 எனும் நிகழ்வுகான செயற்குழுவின் தலைவராக உதய ஹெட்டியாராச்சி செயற்படுவதோடு இவர் இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் பொருளாளராகவும் பணியாற்றுகிறார்.
தேசிய அச்சு விருதுகள் 2023 இன் தலைமைத்துவ செயற்பாட்டளாராக அணில் காரியவசம் இருப்பதோடு இவர் இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இவர்கள் இருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல உறுதுணையாக அமையும்.
மேலும் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.செந்தில்நாதன் மற்றும் உபகுழு உறுப்பினர்களான ஜானக ரத்னகுமார, நிஷாந்த பெரேரா, தேஷாந்த சில்வா. சயனக விக்ரமசிங்க, சமில விதானகே, மற்றும் வசந்த பண்டார இலங்கை அச்சகத்தார் சங்க நிகழ்வு முகாமையாளர் லெனார்ட் எட்வட் அமைப்பு செயலாளர் லக்ஷித்த செனவிரத்ன, நிதியியலல் நிறைவேற்றுனர் Ms.சௌம்யா பிரியதர்ஷினி ஆகியோர் இந்த நிகழ்வுகளின் வெற்றியை நோக்கிய செயற்பாடுகளுக்கு உந்துதலாக உள்ளனர்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
