வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம்: தேசிய மக்கள் சக்தி
வவுனியா மாநகரசபையின் ஆட்சியை தாங்களே கைப்பற்றுவோம் என தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வவுனியா மாநகர சபைக்கான முதல்வர்,பிரதி முதல்வர் தெரிவுகள் இடம்பெறவுள்ள நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வன்னிபிளாசா விடுதியில் நேற்று (15.06.2025) இடம்பெற்றது.
மாநகர சபையின் ஆட்சி
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாம் சில தரப்புக்களுடன் பேசியிருக்கின்றோம். இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியால் சிறந்த ஒரு அதிகாரத்தை வழங்க முடியும் என்று நினைக்கும் கட்சிகள் எமக்கு ஆதரவினை வழங்கும். எனவே மாநகர சபையின் ஆட்சியினை நாம் கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழுவின் பிரதிநிதிகள் பங்கு பற்றியிருந்தனர்.





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
