தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் விரைவில் மாற்றமொன்று நடைபெறவுள்ளதாக பெலவத்தை தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் தற்போதைக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள்
அதேநேரம் அமைச்சர் விஜித ஹேரத் கட்சியின் மூத்த அரசியல்வாதி என்ற வகையில் அவருக்கும் முக்கியமான அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக இன்னும் சில அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் தேசியப் பட்டியல் முஸ்லிம் அரசியல்வாதியொருக்கும், வடமாகாணத்தின் தமிழ் இளம் அரசியல்வாதியொருவருக்கும் பிரதியமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை அண்மித்ததாக குறித்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.