தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தெரிவான பெண் வேட்பாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான றஞ்சினி கனகராசா கட்சியின் தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட றஞ்சினி கனகராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் தெரிவுக் குழுவிலும் பங்குபற்றியிருந்தார்.
கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய இவர், கட்சியின் பிரதி தவிசாளராகவும் செயற்பட்டுள்ளார்.
பலரதும் கோரிக்கை
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தழிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தெரிவுப் பட்டியலில் இவரின் பெயர் பிரதானமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இவருக்கான தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்கும் இவரின் பெயர் தேசிய பட்டியலில் இடம்பெற வேண்டுமென்பது பலரதும் கோரிக்கையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri