தமிழரசுக் கட்சியை விட அதிக ஆசனங்களை கைப்பெற்றுவோம் தமிழரசுக் கட்சியின் மாற்று அணி யாழில் சூளுரை!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலால் அதிருப்தியடைந்த குழுவால் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்தச் சுயேட்சைக் குழுவுக்கான வேட்பாளர்கள் வேட்புமனுவில் நேற்று (10) மாலை கையொப்பமிட்டனர்.
வேட்புமனுத் தாக்கல்
இதில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஷ் உள்ளிட்ட 9 பேர் கையொப்பமிட்டனர்.


இன்று (11) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்று அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri