பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்
பிரித்தானியாவில் முதல் முறையாக சிவப்பு தீவிர வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் லண்டன், மான்செஸ்டர் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், நாளாந்த நடைமுறைகளை மாற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் வேகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம், சில பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதுடன், சில வைத்தியசாலை சந்திப்புகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குதிரை பந்தய போட்டிகள் ரத்து
வீதிகளில் grittersகள் உருகுவதைக் குறைக்க மணலைப் பரப்ப திட்டமிட்டுள்ளனர், மேலும் கார்கள் அதிக வெப்பமடைவதால் அதிக சாரதிகளுக்கு உதவி தேவைப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னறிவிப்பு வெப்பநிலை காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் ஐந்து குதிரை பந்தய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரித்தானிய சுகாதார சேவையும் அதன் உயர்நிலை நான்கு வெப்ப எச்சரிக்கையை சுகாதார மற்றும் பராமரிப்பு அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது.
தீவிர வெப்ப எச்சரிக்கை அமைப்பு 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வெப்பமான வானிலை நிலவும்
அடுத்த வார தொடக்கத்தில் பிரித்தானியாவின் வானிலை முழுவதும் வெப்பமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் கணிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையை விட ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் வெப்பநிலை 30C ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட ஆபிரிக்காவில் தோன்றிய வெப்ப அலை ஐரோப்பா முழுவதும் பரவி போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீயை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.