பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் முதலிடம் பிடித்துள்ள ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் மற்றும் கன்சவேட்டிவ் கட்சி தலைமை பதவிக்கான தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதல் மற்றும் 2ம் சுற்றில் அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தினை பிடித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஏற்பட்ட குழப்பநிலையால் கட்சியின் தலைமை பதவியில் இருந்து அவர் பதவி விலக நேரிட்டது.
இதனை தொடர்ந்து, பிரித்தானிய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷி சுனக் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்தவர்கள் உட்பட 58 பேர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர்.

போரிஸ் ஜோன்சன் பதவி விலகியமைக்கான காரணம்
இதனால், பிரதமராக இருந்த போரிஸ் ஜோன்சன் கன்சவேட்டிவ் கட்சியின் தலைமையில் இருந்து பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை அவர் பிரதமர் பதவியை வகித்து வருகின்றார்.

இதனையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளும் நடந்து வருகின்றன. அவர்களில் ஜோன்சன் அமைச்சரையில் நிதி அமைச்சராக பதவி வகித்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் கடந்த வெள்ளிக்கிழமை புதிய பிரதமர் போட்டிக்கான தனது அறிவிப்பினை வெளியிட்டார்.
இதேபோன்று, அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பாகிஸ்தான் வம்சாவளி சுகாதார மந்திரி சஜித் ஜாவித், போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷேப்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜெரேமி ஹண்ட் ஆகியோரும் போட்டியில் இறங்கியுள்ளனர்.இதில் முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்புக்களில் சுனக் முதல் இடம்பெற்றுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan