தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு கடுமையாகப் பாதிப்பு! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளன.
கடுமையான பாதிப்பு
அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது.

இதேவேளை அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.