திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்: தேசிய தேர்தல் ஆணையகம் அறிவிப்பு
2025, உள்ளூராட்சி தேர்தல்கள் மே 6 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கையின் தேசிய தேர்தல் ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள்
அதேநேரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பதில் ஆணையகத்தின் உறுதிப்பாட்டையும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது அத்துடன் இன்று 53 மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam