சுதந்திர தினத்தில் தமிழ் மொழியிலும் தேசியகீதம் பாடப்பட வேண்டும்! - மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக உள்ளமையினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினை பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இன்றைய தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தமையை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்கின்ற படியினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இது தமிழ் மொழியிலும் பாடப்படும் போது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கான ஒருவழியாக அமையும் என்று நம்புகின்றோம்.
இல்லையேல் இது இனப்பிரச்சினை தீர்வுக்கான வழியினை அடைக்கும் செயலாகவே அமையுமென்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
