என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்: நாசாவின் இன்சைட் விண்கலம் அனுப்பிய இறுதி செய்தி
செவ்வாய் கோளில் முதன்முறையாக நிலநடுக்கம் பற்றிய ஆய்வு பணிக்காக சென்ற இன்சைட் விண்கலம், என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என இறுதியாக செய்தி அனுப்பியுள்ளது.
இன்சைட் என்ற விண்கலம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட நிலையில் விண்கலம் 6 மாத பயணத்திற்கு பின்னர் கோளில் தரையிறங்கி ஆய்வு பணியை தொடங்கியது.
இதற்கமைய, கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியிருந்தது.
விண்கலம் அனுப்பிய இறுதி செய்தி
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மணல் புயலால், இன்சைட் விண்கலத்தின் சூரிய சக்தி தகடுகள் மூடப்பட்டு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்சைட் விண்கலம் கடைசியாக புகைப்படம் ஒன்றை பூமிக்கு அனுப்பி, என்னுடைய சக்தி மிக குறைவாக உள்ளது. அதனால், நான் அனுப்பும் கடைசி புகைப்படம் இதுவாக இருக்க கூடும்.
என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். செவ்வாயில் என்னுடைய காலம் பயன் அளிக்கும் வகையிலும், அமைதியான முறையிலும் இருந்தது. எனது திட்ட குழுவினருடன் என்னால் தொடர்ந்து பேச முடியுமென்றால் நான் பேசுவேன்.
ஆனால், இத்துடன் விரைவில் நான் விடை பெற இருக்கிறேன். என்னுடன் இருந்ததற்காக நன்றி என தெரிவித்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
