பூமியில் புதிய ஆராய்ச்சி திட்டமொன்றை ஆரம்பிக்கும் நாசா
பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்ய, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா(Naza) திட்டமிட்டுள்ளது.
மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள குறித்த திட்டம் வழி வகுக்கும் என நாசா அறிவித்துள்ளது.
இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப்பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவை ஆய்வு செய்யப்படவுள்ளது.
கடல்நீர் மட்ட உயர்வு
இந்த திட்டத்திற்காக 2 நவீன ரக செயற்கைகோள்களை இந்தமாதம் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட்டு துருவ பகுதிகளின் மேல் உள்ள புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

காலநிலை மற்றும் பனி மாதிரிகளை ஆராயும் வகையில் விஞ்ஞானிகள் அந்தத் தகவலை பயன்படுத்த உள்ளனர்.
இதன்மூலம் உலகின் கடல்நீர் மட்டம் உயர்வு, வானிலை மாற்றம் மற்றும் பனிக்கட்டிகள் உருகுதல் எத்தைகய விளைவுகளை அளிக்கக்கூடும் என்பதற்கான கணிப்புகளை விஞ்ஞானிகள் பெற உள்ளனர் என நாசா விளக்கமளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam