தந்தை சொல்லுக்காக வ்லோக்குக்கு விடை கொடுத்த பாகிஸ்தானின் இளவயது யூடியூபர்
பாகிஸ்தானின்(Pakistan) இளம் வயது யூடியூபர் ஷிராஸ் தனது "கடைசி வ்லோக்கை"( vlog) யூட்டியுப் தளத்தில் பகிர்ந்துள்ளமை தொடர்பில் அவரது ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது வ்லோக்கிங் செய்வதை நிறுத்துவதற்கான தனது முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை ஷிராஸ் இருதி காணொளியில் விளக்கியுள்ளார்.
அவரது சகோதரி முஸ்கானும் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளார்.
சேபாஸ் செரீப்புடன் சந்திப்பு
அதில் அவர் சமூக ஊடகங்களில் தனது இரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடம் இருந்து உணர்ச்சிவசப்பட்டு விடைபெறுவதாகன அறிவித்துள்ளார்.
யூடியூப்பில் அவர் வெளியிட்ட 11 நிமிட காணொளியில் தனது தந்தை வோல்கிங் செய்வதற்குப் பதிலாக படிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறார் என்று விளக்கினார்.
தனது சிறிய சகோதரி முஸ்கானுடன் பார்வையாளர்களை வாழ்த்திய பிறகு, ஷிராஸ், “இனிமேல் நான் வ்லாக் செய்ய மாட்டேன். என் அப்பா என்னை படிக்கச் சொன்னார், இப்போதைக்கு காணொளி எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். எனக்கு வ்லோக் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், இது எனது கடைசி வ்லோக்” என்று இருதி காணொளியில் கூறியுள்ள ஷிராஸ் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், ஷிராஸ் பாகிஸ்தான் பிரதமர் சேபாஸ் செரீப்பையும் சந்தித்தமை ஷிராஸ் சந்தித்துள்ளார்.
இந்தநிலையில் ஷிராஸ்க்கு யூடியூப்பில் 1.56 மில்லியன் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |