இஸ்புல்லா இலக்குகள் மீது திடீர் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
தெற்கு லெபனானில்(lebanon) உள்ள இஸ்புல்லா இலக்குகள் மீது எல்லை தாண்டிய தாக்குதளை மேற்கொள்ள இஸ்ரேலின் விமானப்படை தயாராகி வருகிறது.
" தங்களது விமானப்படை லெபனானின் கானா பகுதியில் ஒரு குழுவைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய தரப்பு அறிவித்துள்ளது.
லெபனான் போராளிகள் பயங்கரவாத திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக, இஸ்ரேலின் விமானப்படை தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் விமானங்கள் லெபனானில் உள்ள இஸ்புல்லா அமைப்பின் பரந்த இலக்குகள் முழுவதையும் தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது.
மேலும் வான்வழித் தாக்குதல்கள் அய்தா அல்-ஷாப் மற்றும் கஃபர் கிலா பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போது தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
