அரசாங்கத்தின் செயல் திட்டங்களை அங்கீகரிக்கவில்லை : மகிந்த பகிரங்கம்
பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
செயல் திட்டங்கள்
தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிரான அவரது அறிக்கை குறித்து கேட்டபோது, அவர் மட்டுமல்ல, கட்சியின் 99 சதவீதமானவர்களும் அந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்று மகிந்த கூறியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் செயல் திட்டங்களை பொதுஜன பெரமுன அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதனை அங்கீகரிக்காமல் இருப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது, எங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அத்துடன் எந்த நேரத்திலும் எங்கள் கருத்தை தெரிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |