ரஷ்ய இராணுவத்திற்கு இலங்கையர்களை அனுப்பும் மோசடி: இருவர் கைது
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொட பிரதேசத்தில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்ததன் பின்னர், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்யப்பட்ட பெருந்தொகை பணம்
மேலும், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின் படி நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |