சிங்களத்திலும் தமிழிலும் டுவிட் பதிவிட்ட இந்திய பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திரே மோடி, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு தொடர்பில் அவர் இவ்வாறு இரு மொழிகளிலும் டுவிட் செய்துள்ளார்.
பெருவாரியான மக்கள் நன்மையடைவர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் குறித்த கலாச்சார மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.
இந்திய பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், இந்தியா இலங்கை இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்பினை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்திட்டமே யாழ்ப்பாணம் கலாசார நிலையம். இந்நிலையத்தின் மூலமாக பெருவாரியான மக்கள் நன்மையடையவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அதிஉயர் பிரசன்னம் இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தது என குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா இலங்கை இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்பினை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்திட்டமே யாழ்ப்பாணம் கலாசார நிலையம். இந்நிலையத்தின் மூலமாக பெருவாரியான மக்கள் நன்மையடையவுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அதிஉயர் பிரசன்னம் இந்நிகழ்வை மேலும் சிறப்பித்தது. https://t.co/IqfMi42yHv
— Narendra Modi (@narendramodi) February 11, 2023