பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் பசில்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (16) சந்தித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்தியாவிற்கான இவ் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய கடன் வசதியை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் . எஸ். ஜெய்சங்கர், நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் நிதியமைச்சர் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்த பசில்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam