இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்தித்த பசில்
இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவை புதுடெல்லியில் சந்தித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்தமொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்த சந்திப்பில் நிதி அமைச்சருடன் சென்றுள்ளனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பசில்
ராஜபக்ச இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan