ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பொம்மைகளுக்குள் போதைப் பொருள்
தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விளையாட்டு பொம்மை மற்றும் உணவு அடங்கிய டின்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட போதைப் பொருளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குஷ் மற்றும் மெதம்ஃபைட்டமைன்
சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்குரிய 7 அஞ்சல் பொதிகளை சோதனையிட்ட போதே இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து 673 கிராம் குஷ் மற்றும் மெதம்ஃபைட்டமைன் அடங்கிய 9 ஆயிரத்து 586 மாத்திரைகள் இந்த போதைப் பொருட்களில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி சுமார் 16 கோடி ரூபாவுக்கும் மேல் என கூறப்படுகிறது சந்தேகத்திற்குரிய இந்த அஞ்சல் பொதிகளை பெற்றுக்கொள்ள எவரும் முன்வராத காரணத்தினால், தாபல் மதிப்பீட்டு பிரிவின் அதிகாரிகள் அவற்றை சுங்க திணைக்களத்தின போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் ஆகியவற்றின் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஸ்பெயின், பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்த அஞ்சல் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இவற்றை அனுப்பிய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
