நானாட்டான் பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி மர நடுகை ஆரம்பம்!
''வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலர்ச்சி நகரம்'' என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதற்கமைய நானாட்டான் பிரதேச சபையால் நானாட்டான் சுற்றுவட்ட பகுதி மற்றும் பொது விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை நாட்டியிருந்தனர்.
மறுமலர்ச்சி நகரம்
குறித்த மரம் நடுகையில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , உப தவிசாளர் ஞானராஜ் சோசை, நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ,பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர், பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நாடு பூராகவும் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய குறித்த வாரத்தில் சுற்றாடல் மற்றும் மரம் நடுகை , சுகாதாரம், ஆரோக்கிய, வருமான ஊக்குவிப்பு, இலக்கியம் மற்றும் கல்வி நூலகம், பொது மக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு போன்ற விடயங்களை உள்ளடக்கிய வாரம் செயல்படுத்தப்படவுள்ளது.















அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
