மகிந்தவைச் சந்தித்த இந்தியத் துணைத் தூதர்
இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று(18.11.2025) காலை நடைபெற்றுள்ளது.
இதன்போது இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மகிந்த ராஜபக்ச இடையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள்
மகிந்த ராஜபக்சவின் இன்றைய 80ஆவது பிறந்தநாளுக்கு, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சார்பில் இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்குக் குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri