பாதாள உலகக் குழுவை ஒழிக்கும் போர்வையில் வளர்க்க முற்படாதீர்கள்! நாமல் எச்சரிக்கை
பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும், "பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
எனினும், இதற்குரிய நடவடிக்கை என்ற போர்வையில் மற்றுமொரு குழுவைக் கட்டியெழுப்ப முற்பட்டால் இந்த நடவடிக்கை வெற்றியளிக்காது.
தேர்தலில் பதிலடி
மற்றுமொரு குழுவை உருவாக்குவதற்கு அரசு முற்படுகின்றது என்பதையே அதன் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறு நடந்தால் அரசும் முடிந்துவிடும். எனவே, பாதாள உலகக் குழுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
தமது பொறுப்பை மறந்து இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. இதற்குரிய பதிலடி அடுத்த தேர்தலில் வழங்கப்படும்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri