ஷிரந்தியை காப்பாற்ற தீவிர முயற்சியில் மகிந்த தரப்பு - அம்பலமாகவுள்ள உண்மை
நாடு திரும்பிய முன்னாள் பெண்மணி ஷிரந்தியை காப்பாற்ற தீவிர முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக சந்திப்புகள் மற்றும் வீட்டுக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
இதன்மூலம், தமது ஆதரவாளர்களை திசை திருப்பும் வகையில் விடுத்துவரும் அறிக்கைகள் தொடர்பில் ஆதரவாளர்கள் தீவிர கவனம் திரும்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் தமது ஆதரவாளர்களை சந்திக்கும் போது வெளியிடும் கருத்துக்கள் தீவிர அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
அரசியல் தேவை
இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிரிலிய சவிய கணக்கு தொடர்பிலான தேசிய அடையாள அட்டை இலக்கம் 222222222V என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினுடையது அல்ல என கூறப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த அடையாள அட்டை மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்பவருடையது என்று எதிர்காலத்தில் கூறுவதற்கு இடமளிக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் தேவைக்காக ஷிரந்தி ராஜபக்ச எனப் பெயர் மாற்றப்படுவதற்கு முன்னர், அவரது உண்மையான பிறப்புச் சான்றிதழில் மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரே குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டச்சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று இரவு மீண்டும் நாட்டுக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
விஜய் பற்றி இதுவரை வெளிக்காட்டாத விஷயத்தை கூறியுள்ள நடிகர் அஜித்... என்ன சொன்னார் தெரியுமா? Cineulagam