அநுர அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்கு தொடர வேண்டும் - நாமல் ராஜபக்ச
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையெனில் நாடு சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை விடவும் மொட்டுக் கட்சிக்குரிய வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஆட்சியை பிடித்தல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும் எனவும், கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்காகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam