ராஜபக்சர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: நாமலின் நிலைப்பாடு
பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றமே என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக குறித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வாய்மூல ஆதாரங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் நீதித்துறையை மதித்து வந்துள்ளது. நீதித்துறை எழுத்துமூல ஆதாரங்களை மாத்திரம் ஆராய்ந்துள்ளது, வாய்மூல ஆதாரங்கள் கோரப்படவில்லை.\

பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான சிறந்த இடம் நாடாளுமன்றமே. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றம் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கலாம்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு அனைத்து விடயங்களையும் ஆராய்வதற்கான ஆதாரங்களை கோரலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan