மகிந்தவின் மகன் அனுப்பிய விண்கலம்! பதிலடி கொடுத்த நாமல்
தனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கெட்டினை அனுப்பினார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் சந்திராயன் குறித்தும் நாமல் ராஜபக்சவின் சகோதரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கெட்டினை அனுப்பினார் அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும்.
தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும்.
சேற்றை வாரிவீசும் அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை. இந்த கருத்துக்கள் இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri