விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாமல் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு
வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தொகுதி கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு நேரத்திலும் மக்களின் சார்பில் தாம் முன்னிலையாவதாகவும் முடிந்த அளவு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரித் திட்டம்
கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்ததாகவும், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பிரச்சினையில் தலையீடு செய்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அஸ்வெசும திட்டத்தில் பயனர்கள் மீளாய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிவாரணங்களை வழங்க வேண்டும்
நெல் கொள்வனவு செய்யப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் நெல்லுக்கு வழங்கப்படும் விலை குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் அது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |