வவுனியாவிற்கு நாமல் ராஜபக்ச விஜயம் (Photos)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு
இதன்போது நேற்று (27.09.2022) கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்புக்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிதல்
வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும் கலந்துரையாடல்களில் அடுத்து வரும் உள்ளுராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மீளவும் பொதுஜன பெரமுனவின் ஆட்சியை புதிய கூட்டணியாக மலர செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப்பட்டதாகவும், மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



