நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் வழக்கின் சாட்சிகளை அடுத்த விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
கோவர்ஸ் கோர்ப்பரேட் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் 30 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நாமல் உட்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
நாமல் ராஜபக்ச, இந்திக கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்ய சேனானி சமரநாயக்க மற்றும் கோவர்ஸ் கோர்ப்பரேட் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியோரின் நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் 11 பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
பண மோசடி தொடர்பான விசாரணை
கொழும்பு 5 ஐச் சேர்ந்த கோவர்ஸ் கோர்ப்பரேட் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் , ஸ்ரீலங்கன் ஏர்லைய்க்கான ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்கவின்
முறைப்பாட்டையடுத்து, இந்த பண மோசடி தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.