இலங்கை கிரிகெட் அணியின் வெற்றிக்கு காரணம் நாமல் ராஜபக்சவே! மதுர விதானகே பெருமிதம்
இலங்கை கிரிகெட் அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு காரணம் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் சேவை
மேலும், “நாமல் ராஜபக்சவிற்கு அமைச்சு பதவி வழங்குவதற்கு அவர் தகுதியானவர் என்பதற்கான பல பெறுபேறுகளை நாங்கள் தற்போது கண்டிருக்கின்றோம். அரசியலுக்கு அப்பால் சென்று விளையாட்டு துறைக்கு அவர் பல விடயங்களை செய்துள்ளார்.
அவர் சுயாதீனமாக செயற்பட்டு நாடளாவிய ரீதியிலுள்ள திறமையான வீரர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வந்தார். விசேடமாக ஹம்பாந்தொட்டை பிரதேசத்திலுள்ள திறமையான வீரர்களை இனம்கண்டு அவர்களுக்கு விளையாட்டு சமூகத்தை அறிமுகப்படுத்தி, பாரிய சேவைகளை ஆற்றியுள்ளார்.
2 வருட உழைப்பு
அவரது 2 வருட உழைப்பின் பிரதிபலனாகவே கிரிகெட் ஆசிய கிண்ண வெற்றி கிடைத்துள்ளது.
நாமல் தமது உறவினர்களையோ தமக்கு நெருங்கியவர்களையோ விளையாட்டு துறையில் ஈடுபடுத்தவில்லை.
அவர் சுயாதீனமாக செயற்பட்டு திறமையான அனைத்து வீரர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தார்” என தெரிவித்துள்ளார்.