ஜனாதிபதி வேட்பாளராக நாமல் போட்டியிட்டால் அவருக்கே முழு ஆதரவு..! வீரசிங்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவைக் களமிறக்குவதற்குக் கட்சி தீர்மானித்தால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. டி. வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (03.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் கூறியதாவது,
"நபர்கள் முக்கியம் அல்ல, கட்சி எடுக்கும் முடிவே எமக்கு முக்கியம். எனக்குத் தனிப்பட்ட நிலைப்பாடு இருந்தாலும் கட்சியின் முடிவுக்கே கட்டுப்படுவேன்.

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர். தூர நோக்கு சிந்தனை அவருக்கு உள்ளது.
சர்வதேசத்துடன் சிறந்த தொடர்பைப் பேணி வருகின்றார். எனவே, இளைஞர் ஒருவருக்கும் வாய்ப்பளிப்பது நல்லது" என தெரிவித்துள்ளார்.
you may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri