நாமலின் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பக்கம் நின்று செயற்பட்டவராவார்.ஆனால் கோட்டாபய ஆட்சியில் மொட்டு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரவை அமைச்சராகவும் செயற்பட்டவராவார்.
அவருக்கு வழங்கப்பட்ட பதவிகள்
இவர்,கட்சியின் பெந்தர எல்பிட்டிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். நேற்று (22.01.2026) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளராகவும் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் பத்திரனவுடன், காலி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் குழுவும் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam