பேரணிக்கு பின்னர் சபையில் சீறிய நாமல்..!
மூன்று நாட்களில் கெப் கொண்டுவர முடியுமெனில், ஏன் நாட்டுக்கு மருந்துகளை கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய (22.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரச அதிகாரிகளுக்கு வாகன பெர்மிட்களை கொடுப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெர்மிட்களை வழங்க மாட்டோம் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
கெப் இறக்குமதி
ஆனால், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் வாகனம் கொண்டுவரப்பட உள்ளது. அரசாங்கம் 1,700 கெப் வாகனங்களை இறக்குமதி செய்கின்றது.

இதன் நோக்கம் என்ன என எங்களுக்கு புரியவில்லை. அந்த காலத்தில் போல, வாழை இலைகளை கொண்டு வருவதா இதன் நோக்கம் என்பது தெரியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் வழங்கலாம், ஆனால் வைத்தியர்கள், கடமைக்கு செல்வதற்கு வாகனம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam