மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரணில்! ஊடகங்களுக்கு பதிலளிக்கவில்லை..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
சாமி தரிசனம்
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டதை தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
எனினும் இந்திய ஊடகங்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போதும் ஊடகங்களுக்கு எவ்வித பதிலும் கூறாது அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல்-ஆசிக்






Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri