விடுதலைப்புலிகள் தொடர்பில் மறக்கப்பட்டிருந்த விடயத்தை ஞாபகப்படுத்திய நாமல்
நாங்கள் யுத்தம் செய்தது தமிழீழ விதலைப்புலிகளுக்கு எதிராகவே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. அது மறக்கப்பட்டிருந்தால் ஞாபகப்படுத்தி கொள்ளவும் என நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
டித்வா சூறாவளி தொடர்பான விசேட குழு நியமிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றும் போதே இன்று (21.01.2026) இதனை தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
76 வருட சாபம்
இவர்கள் ஒரு பக்கம் பௌத்த பிக்குகளை விமர்சிப்பதோடு எங்கையாவது புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைத்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால் நாகதீப விகாரைக்கு சென்று 'சில்' எடுத்தால் அது இனவாதம் என ஜனாதிபதி சொல்கிறார். தமிழ் மக்களுக்கு கதிர்காமத்துக்கு செல்வதற்கான சுதந்திரம் இருப்பது போல சிங்கள மக்களும் நாகதீப விகாரைக்கு செல்கின்றனர்.
அத்தோடு கத்தோலிக்க மக்கள் மடுதேவாலயத்திற்கு செல்லவும் முடியும்.அரச தரப்பு எதிர்க்கட்சியில் இருக்கும் போது இருந்த மனநிலையில் பார்க்க வேண்டாம். இன்று அதெல்லாம் மாறிவிட்டது.

76 வருட சாபங்கள் தொடர்பில் பேசி கொண்டிருக்காமல் 77 ஆவது வருடத்தில் வந்திருக்கும் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்கம் அண்மையில் ஏற்பட்ட தாழமுக்கத்தில் சூறாவளி வருவதாக ஒவ்வொரு மணித்தியாலங்களும் எஸ்.எம்.எஸ் அனுப்பினர்.ஏன் டித்வா தொடர்பில் இவ்வாறு செயற்படவில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam