கல்விச் சீர்திருத்தம்: ஹர்ஷ எம்.பி தெரிவித்த சாதகமான கருத்து
கல்வி சீர்திருத்தத்தை தான் விமர்சிக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சிலர் தேவையில்லாமல் விமர்சித்தாலும், நாங்கள் தொடர்ச்சியாக கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால், இதர பிரச்சினைகள் காரணமாக இதை முன்னெடுத்து செல்ல முடியாமல் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டது.
சீர்திருத்தத்தின் ஐந்து தூண்கள்
கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான 5 தூண்கள் (5 Pillars) பற்றி பேசப்பட்டாலும், அவற்றில் 4 குறித்து இதுவரை எந்த விவாதமும் இல்லை.
பாடத்திட்ட சீர்திருத்தம், ஆசிரியர் பயிற்சி மற்றும் மேம்பாடு, பாடசாலை அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களாகும்.
ஆனால் ஒரு தூண் பற்றி மட்டுமே பேசப்படுவதாகவும், மீதமுள்ள 4 தூண்கள் குறித்து இதுவரை முறையான விவாதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிரச்சினைக்குரிய வலைத்தளம் தொடர்பில், யாராவது தவறாகச் செய்திருந்தால், அவர்களை வெளியேற்ற வேண்டும்.
தொழில்நுட்பப் பிழை அல்லது வலைத்தளத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் முழு சீர்திருத்த செயல்முறையையும் ஒரு வருடம் ஒத்திவைப்பது நியாயமற்றது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam