சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் வழங்கிய முக்கிய திருத்தச் சட்டம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்திற்கு நேற்று (20.01.2026) ஒப்புதல் அளித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21.01.2026) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த திருத்தச் சட்டத்திற்கு (05.12.2025) அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, (07.01.2026) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
திருத்தப்பட்ட சட்டம்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்திற்கு, 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க மூலச் சட்டத்தை திருத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாகும்.
இது கடல்கடந்த வங்கி மற்றும் வரி இணக்கப்பாடு தொடர்பான ஒழுங்குமுறையை திருத்தி தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்தச் சட்டத்திட்டம் துறைமுக நகரத்தின் பொருளாதார கட்டமைப்பை உலகளாவிய வங்கித் தேவைகள் மற்றும் தேசிய நிதி ஸ்திரத்தன்மையை இக்காக கொண்டதாகும்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri