மாலைதீவு ஜனாதிபதியை சந்தித்த நாமல் ராஜபக்ச
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொல்ஹியை (Ibrahim Mohamed Solih) இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) சந்தித்துள்ளார்.
விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தம்முடன் சந்திப்பு நடாத்தியமைக்காக அமைச்சர் நாமல், மாலைதீவு ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டியுள்ளார்.
இலங்கையின் கோவிட் நிலைமைகள் குறித்து மாலைதீவு ஜனாதிபதி விசாரித்து அறிந்து கொண்டார். இலங்கை எல்லைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் தெரிவித்துள்ளார்.
மாலைதீவிலிருந்து கூடுதலான விமானங்களை எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கால்பந்தாட்டம், கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri