சிறையில் உள்ள டக்லஸை சந்தித்த நாமல் ராஜபக்ச
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று சந்தித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி காணாமல் போன வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாமல் ராஜபக்ச, மஹர சிறைச்சாலைக்குச் சென்றே டக்ளஸைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அநுர மீது குற்றச்சாட்டு
மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் எம்.பி., புலி டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan