கொலையாளிகளும் திருடர்களும் மீண்டும் அரியணை ஏற முடியாது! நாமலுக்கு பிமல் கொடுத்த பதில்
கொலையாளிகளும், திருடர்களும் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
மக்களின் நிலைப்பாடு
இனிமேல் ஜனநாயகத்தின் பக்கமே மக்கள் நிற்பார்கள் என்றும், மக்களின் விருப்பம் மிக உயர்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் அநீதி செய்பவர்களுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளியவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri