2029 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதி நாமல்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்
எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று(12.9.2026) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வடக்கில் பிறந்த தாம், என்றும் சிங்கள மக்களுடன் இணைந்தே நிற்பதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய நிர்வாகம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகக் விமர்சித்த அவர், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனக் கூறினார்.
மேலும், தாம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்றும், தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் தன் மீது பல வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், தனது கணிப்பின்படி 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என அவர் உறுதியளித்துப் பேசினார்.