அநுர விடுத்துள்ள கடும் மிரட்டல்!
நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொலநறுவையில் இன்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
குற்றக் கும்பல்கள்
நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என அவர் சூளுரைத்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் 70இற்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
எனினும் மரண தண்டனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.