புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா
ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை வெளியீட்டு விழா
இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.