சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை! அரசாங்கத்திற்கு நாமலின் சவால்
எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால் விசாரணை நடத்துங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் வேலைகளை செய்து ஆட்சிக்கு வந்தவர்கள், மாறாகப் பொய்யுரைத்து அரியணையேறவில்லை. ஆனால், பொய்களால் எம்மை வீழ்த்தினார்கள்.
சிறைக்கு செல்வது பிரச்சினையில்லை..
மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நாம் பொய்யுரைக்கவில்லை. அரசியல் பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை. கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னெடுத்து வருகின்றோம்.
2018ஆம் ஆண்டு நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்றபோது மத்திய அரசின் பலம் எம் வசம் இருக்கவில்லை. ஆனால், மத்தியில் அதிகாரம் இல்லை என நாம் திணறவில்லை. சேவைகளை உரிய வகையில் முன்னெடுத்தோம்.
ஜனாதிபதி அநுர தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் போல் செயல்படுகின்றார். எனக்குச் சிறைக்கு செல்வது பிரச்சினை இல்லை. சிறைச்சாலையும் ஒன்றுதான், அரச மாளிகையும் ஒன்றுதான்.
எம் மீது சேறுபூசுவதால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. பொருளாதாரமும் மேம்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
