தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு
புதிய இணைப்பு
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் மாத்தறை நீதவான நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு நீதிமன்றம் விளக்கமறியலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்றையதினம் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தேசபந்து தென்னகோனை இன்று(03.04.2025) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில், இன்றைய தினம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து வெகு நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் தேசபந்து தென்னகோன் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
