அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் இலங்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையின் ஏற்றுமதிகளின் மீது விதித்துள்ள வரி தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாட உள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல், இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் இதில் பேசப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி விதிப்பினால், இலங்கை ஏற்றுமதியாளர்களின் இலாபம் குறைவடையலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்
வரி நிர்ணயம் செய்யப்படவுள்ள ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் வரியை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கத் தரப்பு கலந்துரையாடும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், வரி விதிப்பைத் தடுப்பதில் அரசாங்கம் தலையிடத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் விவாதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐஎம்எப் உடன் இணைந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் உள்ளதால், தங்கள் தரப்பு நியாயத்தை விளக்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
