2029ஆம் ஆண்டு தேர்தலில் பொது வேட்பாளர் யார்? நாமல் எம்.பி. கருத்து
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கப் போகும் பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்படாதா? அவ்வாறு எழும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்? என நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
2029 தேர்தல்
இதற்குப் பதிலளித்த நாமல்,
இது பற்றி 2029ஆம் ஆண்டில் பேசுவோம். தற்போது விவாதிக்க வேண்டிய விடயம் அல்ல அது. எதிரணிகள் ஒன்றிணைந்து வலுவான அரசியல் பயணத்தை முன்னெடுப்பது பற்றியே தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஒன்றிணைவதை நாமல் ராஜபக்ச வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan